பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் தொடரின் ஐந்தாவது பதிப்பு 2023., தெற்காசியாவில் மாற்றத்தை முன்னெடுத்து வரும் பெண் அரசியல் தலைவர்களின் எழுச்சியூட்டும் கதைகளை உங்களுக்குக் கொண்டு வருகிறது.
இந்தப் பதிப்பில் ரோமினா குர்ஷித் ஆலம், பாம்பா பூசல், நிர்மலா சீதாராமன் மற்றும் அதிஷி மர்லேனா ஆகியோரின் குறிப்பிடத்தக்க கதைகள் இடம்பெற்றுள்ளன.
![Let's shift the spotlight from women as mere victims to the powerful agents of change and leadership they truly are!](https://static.wixstatic.com/media/0dea55_23c9112461824456875d8c6ee8a66555~mv2.jpg/v1/fill/w_980,h_481,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/0dea55_23c9112461824456875d8c6ee8a66555~mv2.jpg)
ரோமினா குர்ஷித் ஆலம்
பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
![Romina Khurshid Alam Former Member of Parliament, Pakistan](https://static.wixstatic.com/media/fd2298_aa65ac309be34c1b9c29604983a7279a~mv2.jpg/v1/fill/w_980,h_481,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/fd2298_aa65ac309be34c1b9c29604983a7279a~mv2.jpg)
எஸ்டிஜிகளுக்கான பாகிஸ்தான் பாராளுமன்ற பணிக்குழுவின் அழைப்பாளராக, திருமதி ஆலம் நாட்டின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிலையான வளர்ச்சிக்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட அறிவு மையத்தை நிறுவுவதில் முன்னணியில் இருந்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டில் அடிமட்ட, உள்ளூர் நடிகர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்காகவும் அவர் வாதிட்டார். அவரது தலைமையின் கீழ், அரசாங்கம் 169 இலக்குகளை உள்ளடக்கிய 17 நிலையான வளர்ச்சிக் குறிக்கோள்கள் (SDG) களில் செயல்படுகிறது.
– United Cities and Local Governments - Asia Pacific
பாம்பா பூசல்
நேபாளத்தின் முன்னாள் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
![Pampha Bhusal Former Minister of Energy, Water Resources and Irrigation, Nepal](https://static.wixstatic.com/media/5e1a0a_f94d43f2f0ad4cc890558aa0b0249d48~mv2.jpg/v1/fill/w_980,h_481,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/5e1a0a_f94d43f2f0ad4cc890558aa0b0249d48~mv2.jpg)
முன்னர் நேபாள அமைச்சரவையில் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகப் பணியாற்றிய திருமதி பூசல், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நேபாள குடிமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். நேபாளத்தின் பெரும்பாலும் பாரம்பரிய விவசாயச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைந்த விவசாய முறை மற்றும் நவீன கருவிகளை செயல்படுத்தவும் அவர் முன்மொழிந்துள்ளார். திருமதி பூசல், உள்நாட்டு உர உற்பத்தியை அதிகரித்தார், அதன் மூலம் இறக்குமதிச் சுமைகளைக் குறைத்து, தரிசு நிலங்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்தினார்
– Kathmandu Post, 2021
நிர்மலா சீதாராமன்
இந்திய அரசின் நிதி மற்றும் கார்ப்பரேட் துறை அமைச்சர்
![Nirmala Sitharaman Minister of Finance and Corporate Affairs, India](https://static.wixstatic.com/media/5e1a0a_a5126bdbeb254a019d359ea1fa2e0e0b~mv2.jpg/v1/fill/w_980,h_481,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/5e1a0a_a5126bdbeb254a019d359ea1fa2e0e0b~mv2.jpg)
இந்தியாவின் தற்போதைய மற்றும் முதல் பெண் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பல குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கற்களை முன்னெடுத்துள்ளார். முக்கிய பொதுத்துறை வங்கிகளின் வெற்றிகரமான இணைப்பைச் செயல்படுத்துவதைத் தவிர, அவரது தலைமையின் கீழ் COVID-19 தொற்றுநோய்களின் போது 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் ஒரே நாடாக இந்தியா ஆனது. ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியையும் மேற்கொண்டார்.
– Multiple Sources
அதிஷி மர்லினா
கல்வி, கலாச்சாரம், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், டெல்லி அரசு, இந்தியா
![Aatishi Marlena Minister of Education, Culture, PWD and Tourism, Government of Delhi, India](https://static.wixstatic.com/media/5e1a0a_33c4a5fd70804e0e9b8535e146a171fd~mv2.jpg/v1/fill/w_980,h_481,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/5e1a0a_33c4a5fd70804e0e9b8535e146a171fd~mv2.jpg)
தேசிய தலைநகர் தில்லி பிரதேசத்தின் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றும் திருமதி மர்லினா, நிதி, கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் தலைமை தாங்கினார். கூடுதலாக இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டினார், மேலும் டில்லியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தி தனியார் பள்ளிகளின் தரவரிசைக்கு சமமாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தினார்
– Outlook India, April 2023
மொழிபெயர்த்தவர்: மு.கோபிநாத்
"பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் " என்ற பதிப்பை படித்ததற்கு நன்றி
The translations have been led by volunteers. We thank DLF Foundation and Social Lens for facilitation these translations.
If you find any issues with the translated text, please email us at:
contact@womenforpolitics.com
Comentarios